Rajesh Kumar
மற்றொரு நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
மற்றொரு நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
Couldn't load pickup availability
“சத்யா ஒரு துடிப்பான பையன். இருபத்தொரு வயதிருக்கலாம். செஸ் சாம்பியன். அவன் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் இதுவரை யாருமே எதிர்பார்க்காதது. இண்டியன் லெவலில் நம்பர் ஒன் செஸ் ப்ளேயர் என்று நிரூபித்துவிட்டான். அடுத்த வாரம் ஹாங்காங்கில் நடக்க இருக்கும் செஸ் டோர்னமென்டில் கலந்துகொள்ள வேண்டும்..
“டோர்னமென்டில் சத்யாவிற்குக் கிடைக்க இருக்கும் பரிசுப் பணம் பத்து கோடி ரூபாய். பணம் அவனுக்குப் போய்விடும். ஆனால் பெருமை இந்தியாவிற்கு. உலகமே இந்த செஸ் போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.. ஆனால்..”
“ஆனால்?”
“அடுத்த வாரம் ஹாங்காங்கில் நடக்க இருக்கும் டோர்னமென்டில் சத்யா கலந்துகொள்ள உயிரோடு இருக்க வேண்டுமே..”
“ஏன், அதற்கென்ன..?”
“சத்யா கடத்தப்பட்டிருக்கிறான்..”
இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தன் கவலையைத் தெரிவிக்க, நரேனும், வைஜயந்தியும் களத்தில் இறங்குவது முதல் கதை.
Share
