Skip to product information
1 of 1

Rajesh Kumar

அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்

அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்

Regular price $29.00
Regular price Sale price $29.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity
கண்களை  மூடிப் படுக்கையில் சாய்ந்திருந்த லாயர் அண்ணாஜிராவ் தன்னுடைய செல்போன் சிணுங்கும் சத்தத்தில் கலைந்து அதை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்தார்.

மாஜி எம்.பி மகுடபதி.
அண்ணாஜிராவ் பவ்யமாய் எழுந்து உட்கார்ந்து '' குட் ஈவினிங்...'' என்றார். மறுமுனையில் மகுடபதி கேட்டார்.

'' என்ன லாயர் ஸார்.... உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.''
'' ஆமா... வைரல்ஃபீவர்... ரெண்டு நாளாய் கோர்ட்டுக்கே போகலை...''
'' ஆயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு குட்டித் தலையணை மாதிரி குற்றப்பத்திரிகையை நம்ம கையில் கொடுத்துட்டாங்க, அதைப் படிச்சுப் பார்த்தீங்களா....?
'' பாதி படிச்சேன்...! ஃபீவர் சரியானதும் படிக்க ஆரம்பிக்கணம்....''
View full details