{"product_id":"ஐந்தாம்-பிறை-அடுத்த-இலக்கு-இரண்டு-நாவல்களின்-தொகுப்பு","title":"ஐந்தாம் பிறை - அடுத்த இலக்கு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஐந்தாம் பிறை பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !! அடுத்த இலக்கு இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"ராஜேஷ்குமார்","offers":[{"title":"Default Title","offer_id":44592616833159,"sku":null,"price":33.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51929.jpg?v=1778638473","url":"https:\/\/panuvalpages.com\/products\/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}