{"title":"Historical Romance Novel","description":"","products":[{"product_id":"தென்பாண்டிச்-செல்வன்-பாகம்-1-2","title":"தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 \u0026 2)","description":"\u003cp\u003eதென்காசிப் பாண்டியர்கள் வம்சத்தை தொடங்கி வைத்தவன் பராக்கிரம பாண்டியன். முகலாயர் படையெடுப்பினால் வஞ்சகமாக துறத்தப்பட்ட பராக்கிரம பாண்டியன் தெற்கே தென்காசியை தனது நான்கு தம்பிகளுடன் அடைந்து புதிய தலைநகரம் அமைத்து முடிசூடினான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவடக்கே காசி நகர் முகமதிய தளபதிகளால் சூறையாடப்பட்டு  காசி விஸ்வநாதர் கோயிலும் பல இடிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.  பராக்கிரம பாண்டியனின் கனவில் தோன்றிய காசி விஸ்வநாதர் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொன்னதும் , அதனை சிரம் மேற்கொண்டு கட்டப்பட்டதே இன்றைய தென்காசி விஸ்வநாதர் ஆலயம். கலையழகுடன் காண்போர் வியக்கும் இவ்வாலயம் கட்டப்பட்ட முறையையும், பராக்கிரம பாண்டியனின் செங்கோலாட்சியையும் ‘தென்பாண்டிச் செல்வன்’ என்ற வரலாற்று புதினமாக்கியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511717228679,"sku":null,"price":50.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42153.jpg?v=1776802509"},{"product_id":"வயமான்-வாள்வரி","title":"வயமான் வாள்வரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவயமான் வாள்வரி (வரலாற்று நாவல்)ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரீகத்திலும், வணிகத்திலும், வாழ்வியலிலும் வளமைப் பெற்று பெருமையுற்று மங்கா புகழுடன் தரணியே போற்றும் படி வாழ்ந்த தமிழினத்தின் தலைப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றியும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எழுதப்பட்ட புதினம்               அகிலத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்ற உண்மையை அனைவருக்குள்ளும் ஆழமாக பதியவைத்து கடலுக்குள் உறங்கும் தமிழாதிப் பட்டினம் பூம்புகாரினை உயிர் பெற செய்து வாசகர்கள் கண்முன்னே உலவ செய்யும் புதினம் இந்த வயமான் வாள்வரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44511731875975,"sku":null,"price":49.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42134.jpg?v=1776803003"},{"product_id":"வேல்-விழியாள்-மறவன்-பாகம்-1-2","title":"வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 \u0026 2)","description":"\u003ch5 class=\"widget-title\"\u003eசோழ மன்னன் கரிகாலன் எதற்காக ஈழத்திற்குச் சென்றான்? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்குத் திட்டவட்டமான பதிலில்லாததால், இக்கேள்விகளுக்கு விடையாக என் கற்பனையைப் புகுத்திவிட்டேன். கரிகாலன் என்பவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய குணாதிசையங்கள் யாவை? என்பது பற்றிய தெளிவான ஆதாரங்கள் பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநாநூறு போன்ற நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றை மையமாக வைத்தே கரிகாலனை உருவகித்திருக்கிறேன். வங்கநாசிகதீசனைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவனுடைய ஆட்சிக்காலம் அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை என்பதை ஓரளவிற்கு ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.\u003cbr\u003eஇந்த வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டதே 'வேல் விழியாள் மறவன்' என்கின்ற சரித்திர நீள்கதை. இக்கதையைச் சுவைப்படுத்துவதற்கு அநபாயன், பூங்கோதை, நரசிம்மவரையர், ஜெயபாலசிங்கன், சோதையன், மைத்திரேய தேரர் முதலிய பல கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி இக்கதைக்குள் நடமாடவிட்டிருக்கிறேன். சரித்திரத்தில் கரிகாலனும், வங்கநாசிகதீசனும் இரும்பிடர்த்தலையனும் இடம் பெற்றிருந்தாலும் கற்பனைப் பாத்திரங்களாக வரும் அநபாயனும் பூங்கோதையுமே முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். அப்போதிருந்த ஈழம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை என்னால் முயன்றவரை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். இன்று ஈழத்தின் வரலாறு பல்வேறு வகையில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும், அப்போதிருந்த உண்மை நிலையை வைத்தே இக்கதையை எழுதியிருக்கிறேன். இக்கதையில் வரும் காதலும், ஊடலும், வீரமும், பண்பும் உங்களை இரசிக்க வைக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.\u003c\/h5\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540469346439,"sku":null,"price":52.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42152.jpg?v=1777323301"},{"product_id":"இளவேணியின்-கனவு","title":"இளவேணியின் கனவு","description":"\u003cp\u003eதமிழகத்தின் சரித்திர நவீனம் படைக்க முயன்றோருள் பெரும்பாலோர் பல்லவ சோழ பாண்டி நாட்டு வரலாறுகளையே அறிந்து ஆராய்ந்து பல நூல்களைப் படைக்கின்றனர்.  சேரநாட்டு அரசர்கள் வரலாற்றை இவ்வாறு காண முயலவில்லை. இதற்குக் காரணம் சங்ககால இலக்கியங்கள் சேரநாட்டு அரசர்களின் புகழைப் போற்றுகின்றனவே தவிர கல்வெட்டுகளும் சாசனங்களும் செப்புப் பட்டயங்களும் அதிகமாகக் காணப்படாமையே ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசேர அரசர்களின் வரிசையில் புகழ்பெற்ற அரசன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவரின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் அவன் மேல் தீராக் காதல் கொண்ட இளவேணியின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் கற்பனையோடு சொல்கிறது இந்த நவீனம்.\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44540487991431,"sku":null,"price":40.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42130.jpg?v=1777323918"}],"url":"https:\/\/panuvalpages.com\/collections\/historical-romance-novel.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}